பிரிட்டன் எம்பிக்களின் இ-மெயில் கணக்குகளை முடக்கிய ஹேக்கர்கள்
பிரிட்டன் நாடாளுமன்ற உறுப்பினர்களின் இ-மெயில் கணக்குகளை ஹேக்கர்கள் முடக்கினர்.
ஹேக்கர்களின் தாக்குதலை முதலில் கண்டுகொண்ட லிபரல் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் கிரிஸ் ரென்னார்ட், நாடாளுமன்ற இ-மெயில் கணக்குகளை திறக்க முடியவில்லை. இந்த விவகாரத்தில் உடனடி நடவடிக்கை தேவை என்று ட்விட்டரில் பதிவிட்டார். ஹேக்கர்கள் தாக்குதலை உறுதிப்படுத்தியுள்ள பிரிட்டன் நாடாளுமன்ற செய்தித் தொடர்பாளர், இந்த விவகாரம் தொடர்பாக சைபர் பாதுகாப்பு அமைப்புகள் விசாரணை நடத்தி வருவதாகத் தெரிவித்தார். பிரிட்டனின் தேசிய சுகாதார சேவையின் இணையதளம் கடந்த மே மாதம் நடத்தப்பட்ட ரான்சம்வேர் தாக்குதலில் கடுமையாகப் பாதிக்கப்பட்ட நிலையில், நாடாளுமன்ற உறுப்பினர்களின் இ-மெயில் கணக்குகள் தற்போது ஹேக்கர்களின் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளது.