பிரிட்டனில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டு வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருப்பதால் ராணுவத்தை கொண்டு இந்த பிரச்னைக்கு தீர்வு காண அரசு முடிவு செய்துள்ளது.
எரிபொருள் கொண்டு செல்லும் லாரி ஓட்டுநர்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் பெட்ரோல் டீசல் உள்ளிட்டவற்றை, அந்தந்த பகுதிகளுக்கு கொண்டு சேர்ப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் பல பெட்ரோல் நிலையங்களில் வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றன.
இந்த பிரச்னைக்கு தீர்வு காண , ராணுவ வீரர்களை கொண்டு எரிபொருள்களை டெலிவரி செய்ய அரசு திட்டமிட்டுள்ளது. 5 நாட்களுக்கு முறையான பயிற்சி அளிக்கப்பட்டு ராணுவ வீரர்கள் இந்த பணியில் ஈடுபடுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.