கொரோனா வைரஸ் தாக்குதலை கட்டுப்படுத்த 3 வாரங்கள் பிரிட்டன் முடக்கப்படுவதாக அந்நாட்டு பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார்.
பிரிட்டனில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. தற்போது வரை கொரோனா தொற்றுக்கு 300-க்கும் அதிகமானோர்
உயிரிழந்துள்ள நிலையில், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. இந்நிலையில், கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த பிரிட்டன்
பிரதமர் போரிஸ் ஜான்சன் கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளார்.
3 வாரங்கள் பிரிட்டன் முடக்கப்படுவதாகக் கூறிய அவர், உணவு, மருந்து ஆகிய அத்தியாவசியப் பொருட்களை வாங்க மட்டுமே வீடுகளை விட்டு வெளியே வர
அனுமதிக்கப்படுவர் என்று தெரிவித்துள்ளார். பொது இடங்களில் இரண்டு நபர்களுக்கு மேல் கூடுவது தடை செய்யப்படுவதாகவும், அரசின் கட்டுப்பாடுகளை
மீறுபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் போரிஸ் ஜான்சன் கூறியுள்ளார்