உலகம்

பிரிட்டன் தேர்தல்: சீக்கிய பெண் எம்.பியாக தேர்வு

Rasus

பிரிட்டன் பாராளுமன்றத் தேர்தலில் சீக்கிய பெண் ஒருவர் எம்.பியாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

பிரிட்டன் பாராளுமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி நடைபெற்று வருகிறது. மொத்தம் 650 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடத்தப்பட்டது. இதில் தற்போது வரை 613 இடங்களுக்கான முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. இதில், பிரதமர் தெரசா மே-வின் கன்சர்வேடிவ் கட்சி 296 இடங்களை கைப்பற்றியிருக்கிறது. ஜெர்மி கார்பைனின் தொழிலாளர் கட்சி 251 இடங்களைக் கைப்பற்றி உள்ளது. ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சி ஆட்சி அமைக்க 326 இடங்கள் தேவை.

இதற்கிடையே, பிரிட்டன் பாராளுமன்றத்திற்கு முதல் முறையாக சிக்கிய பெண் பிரீத் கவுர் தேர்வு செய்யப்பட்டு உள்ளார். எட்ஜ்பஸ்டன் தொகுதியில், தொழிலாளர் கட்சியின் வேட்பாளராக களம் இறங்கிய பிரீத் கவுர், சாண்ட்வெல் கவுன்சிலராக இருந்தவர். இப்போது எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டு உள்ளார். பிரிட்டன் பாராளுமன்றத்திற்கு எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்ட முதல் சீக்கிய பெண் இவர். 

பிரீத் கவுர் கூறும்போது, நான் பிறந்து, வளர்ந்தது இங்குதான். மக்களுடன் இணைந்து கடுமையாக பணியாற்ற விரும்புகின்றேன் என்றார்.