உலகம்

பழங்களுக்குள் ஊசி : பதறவைக்கும் சமூக விரோதிகள்

பழங்களுக்குள் ஊசி : பதறவைக்கும் சமூக விரோதிகள்

webteam

ஸ்ட்ராபெர்ரி மற்றும் பிற பழங்களில் ஊசியை வைப்பர்களுக்கு 10 ஆண்‌டுகள் சிறைதண்டனை விதிக்கப்படும் என ஆஸ்திரேலியக் காவல்துறை எச்சரித்துள்ளது.

ஆஸ்திரேலியாவில் வுத் வேல்ஸ், குயுன்ஸ்டான்ட் மற்றும் விக்டோரியா மாகாணங்களில் விற்கப்படும் ஸ்ட்ராபெரி பழத்தினுள் ஊசி இருந்ததாக சமீபத்தில் செய்திகள் வெளியானது.‌ இதையடுத்து பழங்களை வாங்கும்போது எச்சரிக்கையுடன் இருக்குமாறு சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. நியூசிலாந்தின் மிகப்பெரிய வணிக நிறுவனம் ஒன்று முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆஸ்திரேலிய ஸ்ட்ராபெரி பழங்களை விற்பனை செய்வதை நிறுத்திவிட்டது. ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் இது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என ஆஸ்திரேலிய உணவுத்துறை அமைச்சர் உத்தரவிட்டிருந்தார். 

இந்நிலையில் ஆஸ்திரேலியாவில் உள்ள ஸ்ட்ராபெர்ரி பண்ணைகளில் நடத்திய சோதனையில் 20க்கு மேற்பட்ட ஸ்ட்ராபெர்ரி பெட்டிகளில் ஊசிகள் கண்டுபிடிக்கப்பட்டன. மேலும் வாழைப்பழம் மற்றும் ஆப்பிள் பழத்திலும் ஊசிகள் இருந்தது கண்டுப்பிடிக்கப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாக‌ இதுவரை ஒருவரைக்கூட காவல்துறை கைது செய்யவில்லை. ஸ்ட்ராபெர்ரி மற்றும் பிற பழங்களில் ஊசிகளை செலுத்துபவர்களுக்கு 10 ஆண்‌டுகள் சிறைதண்டனை விதிக்கப்படும் என அந்நாட்டு காவல்துறை எச்சரித்துள்ளது. மேலும் இந்த விவகாரத்தில் தொடர்புடையவர்கள் குறித்து துப்பு கொடுப்பவர்களுக்கு 10 லட்சம் டாலர்கள் பரிசாக வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலிய பழங்களின் விற்பனையை முடக்குவதற்கு சமூக விரோதிகள் சிலர் செய்யும் குற்றம் இது என ஆஸ்திரேலிய காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.