எண்ணெய் ஊழல் வழக்கில் பிரேசில் நாட்டின் முன்னாள் அதிபர் தில்மா ரூசெஃப்பின் சொத்துகளை முடக்கும்படி அந்நாட்டு நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
பிரேசிலின் அதிபராக தில்மா ரூசெஃப்பின் ஆட்சியில் இருந்த காலத்தில் எண்ணெய் கொள்முதல் செய்ததில் பிரேசில் அரசுக்கு சொந்தமான பெட்ரோ பிராஸுக்கு பல கோடி ரூபாய் அளவுக்கு இழப்பு ஏற்பட்டதாக புகார் எழுந்தது. இது தொடர்பான வழக்கை விசாரித்து வந்த அந்நாட்டு நீதிமன்றம் முறைகேடுகள் நடந்திருப்பதற்கான முகாந்திரம் இருப்பதை உறுதி செய்தது. அத்துடன் எண்ணெய் நிறுவனத்துக்கு ஏற்பட்டுள்ள இழப்பீடை ஈடுகட்ட ரூசெஃப்பின் சொத்துகளை முடக்கும்படி உத்தரவிட்டுள்ளது. நிதி மேலாண்மை விதிகளை மீறிய குற்றச்சாட்டுக்காக கடந்த ஆண்டு அவர் அதிபர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.