ஜெசிகா ஆல்வ்ஸ் கூகுள்
உலகம்

அழகுக்காக 100க்கும் மேற்பட்ட பிளாஸ்டிக் சர்ஜரி செய்த ஜெசிகா ஆல்வ்ஸ்

பெண்களுக்கு நிகராக ஆண்களும் இக்காலகட்டங்களில் இளமையாக இருக்கவே விரும்புகின்றனர் என்றாலும் சதவிகித அடிப்படையில் ஆண்களைக்காட்டிலும் பெண்கள் சதவிகிதம் அதிகம்.

Jayashree A

எத்தனை வயது ஆனாலும் பெண்கள் தாங்கள் அழகாக இருப்பதையே விரும்புவார்கள். இதன் காரணமாக உடலில் டாட்டூ போட்டுக்கொள்வதிலிருந்து, சிகை அலங்காரம் வரை இன்றைய நாட்களில் பெண்கள் அழகுக்கென்று செலவழிக்கும் தொகையானது, அதிகரித்து வருகிறது.

பெண்களுக்கு நிகராக ஆண்களும் இக்காலகட்டங்களில் இளமையாக இருக்கவே விரும்புகின்றனர் என்றாலும் சதவிகித அடிப்படையில் ஆண்களைக்காட்டிலும் பெண்கள் சதவிகிதம் அதிகம்.

amy jackson

நாற்பது வயது கடந்த பெண்களின் உடல் உருவத்தில் சில மாற்றங்கள் ஏற்படுவது இயற்கையே என்றாலும், வசதி படைத்த பெண்களில் சிலர் தங்களின் வயதான தோற்றத்தை விரும்புவதில்லை. எப்பொழுதும் போல இளமையாக, அழகாக இருப்பதையே விரும்புகிறார்கள். அதனாலேயே பிரபலங்கள் சிலர் பிளாஸ்டிக் சர்ஜரி முறையில் உருவத்தை உடலை மாற்றிக்கொள்வதில் கவனம் செலுத்துகிறார்கள்.

தமிழ் நடிகை ஸ்ரீதேவி, மூக்கினால் தன் அழகு குறைந்ததாகக் கருதி அதை பிளாஸ்டிக் சர்ஜரி செய்துக்கொண்டு முக அமைப்பை மாற்றிக்கொண்டார். அதே போல் சமீபத்தில் ஐ படத்தில் நடித்த எமி ஜாக்சன், பிளாஸ்டிக் சர்ஜரி மூலம் தனது முக அமைப்பை மாற்றிக்கொண்டார்.

இந்த வரிசையில், பிரேசில் அழகி ஜெசிகா ஆல்வ்ஸ் தனது அழகிற்காக ஒன்றல்ல இரண்டல்ல 100க்கும் மேற்பட்ட அறுவை சிகிச்சை செய்துக்கொண்டு தனது உடல் அழகை தக்கவைத்துக்கொண்டிருக்கிறார். தனது அழகானது துளிக்கூட குறையக்கூடாது என்றும் அழகிற்காக இன்னமும் எத்தனை முறை வேண்டுமென்றாலும் பிளாஸ்டிக்சர்ஜரி செய்துக்கொள்வேன் என்பதில் மிகவும் உறுதியாக இருக்கிறார்.

ஜெசிகாவிற்கு இப்பொழுது 41 வயதாகிறது. இவரிடம் அழகா? வலியா? எது வேண்டும் என்று இவரிடம் கேட்டால் யோசிக்காமல் அழகு என்பதை டிக் செய்கிறார். காரணம் ஒவ்வொரு அறுவை சிகிச்சையின் போதும் ஏற்படும் வலியை அழகுக்காக பொறுத்துகொள்வாராம்.

இவர் தனது மூக்கை வேண்டிய வடிவத்தில் கொண்டுவருவதற்கு 12 முறை பிளாஸ்டிக் சர்ஜரி செய்துக்கொண்டு இருக்கிறார். ஒவ்வொரு உறுப்புகளை மாற்றி அமைப்பதற்கு அவகாசமாய் குறைந்தது பத்து வருடத்தை எடுத்துக்கொள்கிறார். குறிப்பாக அவர் தனது உடலில் மார்பகங்களையும் இடுப்பையும் இளமையாய் அழகாய் வைத்துக்கொள்ள அதிக கவனம் செலுத்துகிறார்.

மெலிதான இடுப்பை பெருவதற்கு செய்யப்பட்ட பிளாஸ்டிக் சர்ஜரிலில் விலா எலும்புகளை அகற்றவும் ஜெசிகா தயாராக இருந்துள்ளார். அதிஷ்டவசமாக அப்படி ஒரு சம்பவம் நடக்கவில்லை. இருப்பினும், ஒவ்வொரு அறுவை சிகிச்சையும் அவருக்கு தன்னம்பிக்கையை அதிகப்படுத்துகிறது என்கிறார். இவரைப்பொருத்தவரையில் அழகு என்ற சொத்தில் இவர் பணத்தை முதலீடு செய்கிறார். இது வரை இவர் அழகிற்காக அறுவை சிகிச்சை செய்துக்கொண்டதற்கு ஆன செலவு சுமார் 10 கோடியையும் தாண்டியுள்ளது என்கிறார்கள்.