உலகம்

அதிகாரிகளுக்கு மூளை பாதிப்பு: கியூபாவில் அமெரிக்க தூதரகத்தை மூட பரிசீலனை

அதிகாரிகளுக்கு மூளை பாதிப்பு: கியூபாவில் அமெரிக்க தூதரகத்தை மூட பரிசீலனை

webteam

உடல்நலக்குறைவால் தூதரக அதிகாரிகள் அவதிப்பட்டு வருவதை தொடர்ந்து கியூபாவில் உள்ள தூதரகத்தை மூட அமெரிக்கா பரிசீலித்து வருகிறது.

கியூபாவுடன் நட்புறவை பாராட்டும் வகையில் முன்னாள் அதிபர் ஒபாமா மேற்கொண்ட முயற்சியின் காரணமாக அந்நாட்டில் இரு ஆண்டுகளுக்கு முன் அமெரிக்க தூதரகம் திறக்கப்பட்டது. தலைநகர் ஹவானாவில் உள்ள அந்த தூதரகத்தில் 21 அதிகாரிகள் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் அவர்கள் அனைவரும் மூளை மற்றும் செவி கேட்பு திறன் குறைவு நோயால் பாதிக்கப்பட்டு பெரும் அவதிக்கு ஆளாகி வருகின்றனர்.

புதிய வகையான ஒலித் தாக்குதல் காரணமாகவே அவர்களுக்கு இந்த பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக குற்றம்சாட்டி வரும் அமெரிக்கா, இந்த ஆபத்து காரணமாக தூதரகத்தை மூடுவது குறித்து தீவிரமாக பரிசீலித்து வருகிறது. அதே சமயம் ஒலி தாக்குதல் என்ற குற்றச்சாட்டை மறுத்துள்ள கியூபா இந்த சதியின் பின்னணியில் தங்களுக்கு எந்த தொடர்பும் இல்லை என திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. கியூபா மற்றும் கனடா புலனாய்வு துறையினர் நடத்திய விசாரணையிலும் எந்த ஆதாரங்களும் இதுவரை கிடைக்கவில்லை.