உலகம்

ஆஃப்கானிஸ்தான் அரசு அலுவலகம் அருகில் குண்டு வெடிப்பு

webteam

ஆஃப்கானிஸ்தானின் காபூல் பகுதியிலுள்ள தலைமை வழக்கறிஞர் அலுவலகத்தின் அருகில் குண்டு வெடிப்பு சம்பவம் நடந்துள்ளது. 

ஆஃப்கானிஸ்தானில் அரசிற்கும் தாலிபான் அமைப்பிற்கு இடையே உள்நாட்டு போர் நிலவி வருகிறது. இதனை முடிவுக்கு கொண்டுவர அமெரிக்கா தாலிபான் அமைப்புடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டுவருகிறது. ஆனால் தாலிபான் அமைப்பு அரசு அலுவலகங்களை குறிவைத்து தாக்கும் எனக் கூறியிருந்தது. இதனையடுத்து ஆஃப்கானிஸ்தானில் பாதுகாப்பு தீவிர படுத்தப்பட்டது.

இந்நிலையில் தலைநகர் காபூலிலுள்ள அரசு தலைமை வழக்கறிஞர் அலுவலகம் அருகில் குண்டு வெடிப்பு நிகழ்ந்துள்ளது. இச்சம்பவம் காபூலின் ஷஹர்-இ-நாவ் பகுதியில் நடந்துள்ளது. இதுகுறித்து உள்ளூர் காவலர், “ஷஹர்-இ-நாவ் பகுதியில் இன்று குண்டு வெடிப்பு நடந்தது. இந்தக் குண்டு வெடிப்பில் எத்தனை பேர் உயிரிழந்தார்கள் என்பது தெரியவில்லை”  எனத் தெரிவித்தார்.

ஏற்கெனவே 2 வாரங்களுக்கு முன்பு காபூலிலுள்ள தொலைத்தொடர்பு துறையின் முன் பயங்கரவாதி ஒருவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 7 பேர் உயிரிழந்தனர். இந்தக் தாக்குதலை ஐஎஸ் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுக் கொண்டது குறிப்பிடத்தக்கது.