இங்கிலாந்தில் நடந்த குண்டுவெடிப்பில் 19 பேர் பலியாயினர். 50-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.
இங்கிலாந்தின் மான்செஸ்டர் நகரில் நேற்று நள்ளிரவில் அமெரிக்க பாடகர் அரியானா கிராண்டேவின் இசை நிகழ்ச்சி நடந்துகொண்டிருந்தது. இதை ஆயிரக்கணக்கானோர் ஆர்வமுடன் ரசித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு திடீரென பயங்கர சத்தத்துடன் குண்டுவெடித்தது. இதனால், அரங்கத்தில் இருந்தவர்கள் அலறியடித்து ஓடினர். இந்தக் குண்டுவெடிப்பில் 19 பேர் பலியாயினர். 50 பேர் படுகாயமடைந்தனர். பலியானோர் எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.
இது பயங்கரவாத தாக்குதல் என்று போலீசார் தெரிவித்தனர். அரங்கத்தில் சத்தம் கேட்டதும், இசை நிகழ்ச்சியின் ஒரு பகுதி என்று நினைத்துவிட்டதாக, தப்பித்தவர்கள் தெரிவித்தனர். இது மனிதவெடிகுண்டு தாக்குதலாக இருக்கலாம் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.