உலகம்

மேக்ஸ் விமான தயாரிப்பை நிறுத்துவதாக போயிங் அறிவிப்பு

மேக்ஸ் விமான தயாரிப்பை நிறுத்துவதாக போயிங் அறிவிப்பு

jagadeesh

சர்ச்சைக்குரிய போயிங் 737 மேக்ஸ் விமானங்களின் தயாரிப்பை வரும் ஜனவரி மாதம் முதல் தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக போயிங் நிறுவனம் அறிவித்துள்ளது.

இந்தோனேஷியா மற்றும் எத்தியோப்பியாவில் போயிங் 737 மேக்ஸ் விமானம் விபத்துக்குள்ளானதில் 300க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். விமானத்தின் புதிய தொழில்நுட்ப அம்சத்தில் பழுது இருப்பது கண்டறியப்பட்டது.

இதனை அடுத்து இந்த ரக விமானங்களுக்கு பல்வேறு நாடுகள் தடை விதித்தன. தடை நீக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அது நடைபெறவில்லை. எனவே போயிங் 737 மேக்ஸ் விமானங்களின் தயாரிப்பை தற்காலிகமாக நிறுத்துகிறோம் என அந்நிறுவனம் கூறியுளளளது. இதனால் அமெரிக்க பொருளாதாரம் பாதிக்கப்படும் என வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.