உலகம்

கொரோனா கொடுமை: அடக்கம் செய்யப்படாமல் வீதிகளில் கைவிடப்படும் உடல்கள்

கொரோனா கொடுமை: அடக்கம் செய்யப்படாமல் வீதிகளில் கைவிடப்படும் உடல்கள்

webteam

ஈகுவடாரில் அடக்கம் செய்யப்படாமல் வீதிகளில் உடல்கள் கைவிடப்படுவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

ஈகுவடாரில் கொரோனாவால் உயிரிழப்போரை அடக்கம் செய்வதற்கு ஆள்கள் முன்வராத காரணத்தினால், வீதிகளில் சடலங்களை விட்டு விட்டு, உறவினர்கள் வெளியேறுவது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. அந்நாட்டின் மிகப் பிரபலமான குவாயாகுயில் நகரில் கொரோனா வேகமாக பரவி வருவதால், மருத்துவமனைகள் அனைத்தும் நோயாளிகளால் நிரம்பி வழிகிறது.

போதிய படுக்கை வசதி இல்லாத காரணத்தினால், பல நோயாளிகள் வீடுகளிலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இந்நிலையில், கொரோனாவால் பாதிக்கப்பட்டு ஒருவர் பின் ஒருவராக உயிரிழந்து வருகின்றனர். இதில் சிலரது சடலங்கள் வீதிகளில் நெகிழி பைகள் மூலம் சுற்றி வைக்கப்பட்டிருக்கிறது. ஒரு சிலர் வீடுகளிலும், மேலும் சிலர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக காத்திருந்தபோதும் உயிரிழந்துள்ளனர்.