இலங்கை தலைநகர் கொழும்பில் இன்று மேலும் ஒரு குண்டு வெடித்ததாக செய்தி வெளியாகியுள்ளது.
ஈஸ்டர் பண்டிகை நாளான கடந்த ஞாயிற்றுக்கிழமை, இலங்கையில் 8 இடங்களில் அடுத்தடுத்து குண்டுகள் வெடித்தன. தொடர் குண்டுவெடிப்பு சம்பவங்களில் இதுவரை 359 பேர் உயிரிழந்துள்ளனர். இதில், இந்தியாவைச் சேர்ந்த 10 பேர் உள்பட 35 வெளிநாட்டினரும் கொல்லப்பட்டனர். காயமடைந்த 500-க்கும் அதிகமானோர், பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தச் சம்பவத்திற்கு ஐஎஸ் அமைப்பு பொறுப்பேற்றது. 9 பேர் மனித வெடிகுண்டுகளாக பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. இந்நிலையில் அங்கு மேலும் ஒரு குண்டு வெடிப்பு சம்பவம், இன்று நடந்துள்ளதாகக் கூறப்படுகிறது. கொழும்புவில் இருந் து 40 கி.மீ தொலைவில் உள்ள புகோடா நகரில் இந்தக் குண்டு வெடிப்புச் சம்பவம் நடந்துள்ளது. அங்குள்ள நீதிமன்றத்தின் பின்புறம் பலத்த வெடிச்சத்தம் கேட்டதாக, அங்கிருந்த பொது மக்கள் மற்றும் போலீசார் தெரிவித்த னர். இதையடுத்து போலீ சாரும் வெடிகுண்டு நிபுணர்களும் அங்கு விரைந்துள் ளனர்.