உலகம்

பாஜக அமோக வெற்றி: ஸ்பெயினில் ஆதரவாளர்கள் கொண்டாட்டம்!

பாஜக அமோக வெற்றி: ஸ்பெயினில் ஆதரவாளர்கள் கொண்டாட்டம்!

webteam

பாஜக அமோக வெற்றி பெற்றதை அடுத்து, ஸ்பெயின் நாட்டில் பாஜக ஆதரவாளர்கள் வெற்றியை கொண்டாடியுள்ளனர். 

மக்களவைத் தேர்தல், கடந்த ஏப்ரல் 11-ஆம் தேதி தொடங்கி கடந்த 19-ஆம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடைபெற்றது. மொத்தம் உள்ள 543 தொகுதிகளில், தமிழகத்தில் உள்ள வேலூர் தொகுதி தவிர, 542 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடந்தது. ஆட்சியமைக்க போவது யார் என்ற எதிர்பார்ப்பு காணப்பட்ட நிலையில், வாக்கு எண்ணிக்கை நேற்று காலை தொடங்கியது.

இதுவரை 50‌3 இடங்களுக்கான முடிவுகள் அறிவிக்கப் பட்டுள்ளன. அதில் பாஜக 290 தொகுதிகளில் வெற்றிபெற்றுள்ளது. 13 தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளது. இதனால் அமோக வெற்றி பெற்றுள்ள பாஜக கூட்டணி தனிப் பெருபான்மையுடன் ஆட்சிய மைக்கிறது.

காங்கிரஸ் கட்சி 50 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. மேலும் 2 இடங்களில் முன்னிலையில் உள்ளது. ‌

பாஜகவின் வெற்றியை நாடு முழுவதும் அந்தக் கட்சியின் ஆதரவாளர்கள் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் ஸ்பெயினில் உள்ள பார்சிலோனாவில் பாஜக ஆதரவாளர்கள் கூடி, பாஜகவின் வெற்றியை ஆட்டம் பாட்டத்துடன் கொண்டாடினர். கையில் தேசிய கொடியை பிடித்தபடி, தாங்கள் வைத்திருந்த ஒலிபெருக்கியில் பாஜகவுக்கு ஆதரவாகவும் மோடியை வாழ்த்தியும் அவர்கள் கோஷமிட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.