அமெரிக்காவின் விலங்கியல் பூங்காவில் ஒட்டகச்சிவிங்கி, ஆண் குட்டியை ஈன்றெடுத்தது இணையத்தில் நேரடியாக ஒளிபரப்பப்பட்டது.
நியூயார்க்கின் மேற்குப் பகுதியின் ஹார்ப்பர்ஸ்வில்லில் உள்ள ஏப்ரல் என்ற ஒட்டகச்சிவிங்கி பராமரிக்கப்பட்டு வருகிறது. இதன் பிரசவத்தை நேரடியாக ஒளிபரப்பு செய்ய விலங்கியல் பூங்கா கடந்த பிப்ரவரி மாதம் முதல் யூடியூப் நேரலைச் சேவையை வழங்கியது. ஆண் குட்டியை ஈன்றெடுத்த வீடியோ பதிவை கோடிக்கணக்கானோர் நேரலையில் கண்டனர்.