பென்குயின்
பென்குயின் கோப்புப்படம்
உலகம்

அண்டார்டிகா - பென்குயின்களுக்கு பறவைக்காய்ச்சல்...!

Jayashree A

தெற்கு அட்லாண்டிக் கடற்கரையின் ஜார்ஜியா தீவில் பல பழுப்பு நிற ஸ்குவாக்கள் (brown skuas) இறந்து கிடந்த விவரம் தெரியவந்ததால், அங்கு விரைந்துள்ளது இங்கிலாந்தின் விலங்கு மற்றும் தாவர சுகாதார நிறுவனம். இறந்த ஸ்குவாக்களை பரிசோதனை செய்து பார்த்ததில், அவற்றுக்கு H5N1 என்ற பறவைக்காய்ச்சல் உறுதிசெய்யப்பட்டது. அதனால் அவை இறந்தன என்பதும் தெரியவந்துள்ளது.

இதனை அடுத்து, அப்பகுதியில் இருந்த பிற பென்குவின்களை சோதனை செய்துள்ளனர் மருத்துவர்கள். அதில் மேலும் ஐந்து பென்குவின்களுக்கு பறவைக்காய்ச்சல் இருப்பதை உறுதிசெய்தனர். போலவே ஜார்ஜியாவிற்கு அருகில் இருக்கும் பறவைகள் தீவில் மேலும் ஐந்து ஜெண்டூ பென்குவின்களுக்கும் பறவைக் காய்ச்சல் இருப்பது தெரியவந்துள்ளது.

தென் அமெரிக்காவிலிருந்து இடம்பெயர்ந்த பறவைகள் மூலம் ஜோர்ஜியாவிலுள்ள பென்குவின்களுக்கு H5N1 நோய் தாக்கியிருக்கலாம் என்றும், குளிர்காலத்தில் பென்குவின்கள் இனப்பெருக்கம் செய்வதற்கு ஒன்றிணைந்தால் இந்த வைரஸானது மேலும் பரவக்கூடும் என்றும் மருத்துவர்கள் கூறுகின்றனர்.