உலக பணக்காரர்கள் பட்டியலில் 2 ஆம் இடத்தில் இருந்த பில் கேட்ஸ் மூன்றாம் இடத்துக்கு பின்தங்கியுள்ளார்.
புளூம்பெர்க் நிறுவனம் அவ்வப்போது உலக பணக்காரர்கள் பட்டியலை வெளியிட்டு வருகிறது. இந்தப் பட்டியலில் பல ஆண்டுகளாக முதலிடத்தில் இருந்த பில் கேட்ஸை பின்னுக்கு தள்ளி அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ் முதல் இடத்தைப் பிடித்தார். இதையயடுத்து 2ஆம் இடத்தில் இருந்து வந்தார், பில்கேட்ஸ். இப்போது அவர் மூன்றாம் இடத்திற்கு வந்துள்ளார்.
(பெர்னார்ட் அர்னால்ட்)
பிரான்ஸை சேர்ந்த பெர்னார்ட் அர்னால்ட் இரண்டாமிடத்தை பிடித்திருப்பதாக புளூம்பெர்க் நிறுவனம் தெரிவித்துள்ளது. பிரான்ஸைச் சேர்ந்த எல்விஹெச்எம் (LVHM ) நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியான அர்னால்டின் சொத்து இந்த ஆண்டில்தான் அதிகரித்துள்ளது என புளூம்பெர்க் கூறியுள்ளது.
புளூம்பெர்க் பட்டியல்படி ஜெஃப் பெசோஸ் 125 பில்லியன் அமெரிக்க டாலர் சொத்துகளுடன் முதலிடத்திலும், 108 பில்லியன் டாலர் சொத்துக்களுடன் பெர்னார்ட் 2ஆம் இடத்திலும், 107 பில்லியன் டாலர் சொத்துகளுடன் பில்கேட்ஸ் மூன்றாமிடத்திலு ம் உள்ளனர்.