உலகம்

கோடீஸ்வரர்கள் இன்னும் அதிகமாக வரி கட்ட வேண்டும்: பில் கேட்ஸ்

webteam

கோடீஸ்வரர்கள் தற்போது செலுத்துவதை விட கூடுதலான வரியை செலுத்த வேண்டும் என்று பில் கேட்ஸ் வலியுறுத்தியுள்ளார்.

மைக்ரோசாஃப்ட் நிறுவனர்களில் ஒருவரான பில் கேட்ஸ், உலகின் இரண்டாவது பெரிய பணக்காரராக உள்ளார். இவர் புத்தாண்டையொட்டி எழுதிய கட்டுரையில் கோடீஸ்வரர்கள் இன்னும் அதிகமாக வரி கட்ட வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். மேலும் தெரிவித்துள்ள அவர், அமெரிக்காவின் சட்ட நிபுணர்கள் சட்டத்தின் மீதுள்ள ஓட்டைகளை அடைக்கவேண்டும். மூலதன ஆதாய வரி, நில வரி ஆகியவற்றை உயர்த்த வேண்டும். இது இது தொழிலாளர் வருமானத்தின் விகிதத்திற்கு சமம் என தெரிவித்துள்ளார்.

மேலும், வரி விதிப்பதில் இன்னும் சிறப்பான திட்டத்தை கொண்டு வர வேண்டுமென அந்நாட்டு அரசுக்கு அவர் கோரிக்கை விடுத்துள்ளார். மேலும், 'உங்களிடம் அதிக பணம் இருந்தால் அதிக வரி செலுத்துங்கள். பணக்காரர்கள் தற்போது செலுத்தும் வரியை விடவும் அதிகமாக வரி செலுத்த வேண்டுமென நான் நினைக்கிறேன். அந்த விதி எனக்கும் பொருந்தும்.

முதல் நிலையில் இருக்கும் 1% அமெரிக்கர்கள் வேலையை பொருத்து இல்லாமலேயே குறிப்பிட்ட தொகையை செலுத்த முடியும். 1970களில் விளிம்பு வரி என்பது தற்போதையை வரியை காட்டிலும் இரண்டு மடங்கு அதிகம். ஆனால் அப்போது தான் நானும், பால் அலெனும் மைக்ரோசாப்டை தொடங்கினோம். அது எங்களது ஆர்வத்தையோ, ஊக்கத்தையோ கெடுக்கவில்லை' என தெரிவித்துள்ளார்