உலகம்

3 டன் எடை கொண்ட பறவையைப் பற்றி தெரியுமா உங்களுக்கு?

3 டன் எடை கொண்ட பறவையைப் பற்றி தெரியுமா உங்களுக்கு?

webteam

டைனோசர் காலத்தில் வாழ்ந்த ராட்சத பறவையின் புதைப்படிவம் ஒன்று தற்போது சீனாவின் கனான் என்ற பகுதியில் ஆய்வு செய்தபோது கிடைத்துள்ளது.

சீனாவில் டைனோசர் காலத்தில் வாழ்ந்த ராட்சத பறவையின் புதைப்படிவம் ஒன்று கனான் என்ற பகுதியில் கிடைத்துள்ளது. படிமத்தின் அளவை வைத்துப் பார்க்கும்போது, இந்த பறவை 3 ஆயிரம் கிலோ எடையும், 8 மீட்டர் உயரமும் இருந்திருக்க வேண்டும் என்று கருதுகிறார்கள்.

இந்தப் பறவைக்கு பெய்பிலாங் என்று பெயரிட்டுள்ளனர். இந்தப் பறவை மிகப்பெரிய பெரிய அளவில் கூடுகட்டி வாழ்ந்திருக்கலாம் என்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.

சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்பு இந்த பகுதியில் 40 செ.மீ. உயரம், 5 கிலோ எடை கொண்ட ராட்சத பழங்கால முட்டைகளின் படிமங்கள் ஏராளமான கிடைத்தன. அந்த முட்டைகள் இந்த பறவையினத்தின் முட்டைகளாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. இந்த பறவைகள் 9 கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்து இருக்கலாம் என்று கூறுகின்றனர்.