ஆட்சிக்கு வந்த 100 நாட்களில் அமெரிக்க அரசாங்க நிர்வாகத்தை டொனால்ட் ட்ரம்ப் சீரழித்துள்ளதாக, முன்னாள் அதிபர் ஜோ பைடன் விமர்சித்துள்ளார்.
தமது ஆட்சிக்காலம் நிறைவடைந்த பிறகு, முதல் முறையாக ஜோ பைடன் உரை நிகழ்த்தினார். அப்போது, அவசர அவசரமாக ட்ரம்ப் கொண்டுவந்த மாற்றங்களால், அமெரிக்கர்களுக்கு கிடைக்கப்பெறும் சலுகைகள் பாதிக்கப்படும் என்று கூறினார்.
மேலும் இவ்வளவு குறுகிய காலத்தில் இத்தனை பேரழிவுகளை ட்ரம்ப் அரசு கொண்டுவந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாகவும் ஜோ பைடன் குறிப்பிட்டார்.