உலகம்

காஷ்மிரில் என்ன நடந்தது என்று அமெரிக்கர்களுக்கு நீங்கள் தான் கூற வேண்டும்! - ஜெய்சங்கர்

காஷ்மிரில் என்ன நடந்தது என்று அமெரிக்கர்களுக்கு நீங்கள் தான் கூற வேண்டும்! - ஜெய்சங்கர்

Abinaya

ஐ.நா. பொதுச்சபையின் வருடாந்திர கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் நியூயார்க் சென்றுள்ளார். அங்கு நடந்த கூட்டத்தில் அமெரிக்கா வாழ் இந்தியர்களிடம் பேசிய ஜெய்சங்கர், இந்தியா குறித்து பாரபட்சமான செய்திகளை வெளியிட்டுள்ளதாக வாஷிங்டன் போஸ்ட் உள்ளிட்ட அமெரிக்க ஊடகங்களுக்குக் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இந்தியாவிற்கு எதிரான கருத்துடையவர்கள் அமெரிக்காவில் அதிகரித்துவருவது குறித்த கேள்வி எழுந்த போது அதற்குப் பதிலளித்த கொள்வதற்காக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், ’’ அமெரிக்காவிலிருக்கும் முக்கிய ஊடகங்கள் பாரபட்சம் இருக்கிறது. அதை சரி செய்வதற்கான முயற்சி நடைபெற்று வருகிறது.

இந்தியாவுக்கு எதிரான கருத்துகளை உருவாக்குபவர்கள் யார் என்று தெரியும். அவர்களால ஒருபோதும் இந்தியாவில் வெற்றி பெற முடியாது. அதனால் அவர்கள் இந்தியாவிற்கு வெளியே இருந்து இந்தியாவைத் தீர்மானிக்க முயல்கிறார்கள். இதுபற்றி மக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். அமெரிக்கர்கள் நம்மை பற்றி தவறாக நினைத்துக்கொள்ள அனுமதிக்க கூடாது.

காஷ்மீர் விவகாரம் குறித்தும் தவறான கருத்துகள் பரப்பப்பட்டுள்ளது. இந்திய அரசியல் அமைப்பு வழங்கியிருந்த ஒரு தற்காலிக வசதி, இப்போது திரும்பப் பெறப்பட்டிருக்கிறது. உண்மை அங்கே திரிக்கப்பட்டுள்ளது. சரி, தவறு பற்றி இங்குள்ளவர்களுக்கு நாம் தான் எடுத்துக் கூற வேண்டும். ” என்று பேசினார்.