உலகம்

உணவளிக்க வந்தவரை தாக்கிய கரடி

webteam

சீனாவின் தலைநகரம் பெய்ஜிங்கில் உள்ள வனவிலங்கு சரணாலயத்தில் கரடியால் ஒரு சுற்றுலா பயணி தாக்கப்பட்டார். 

கரடிக்கு உணவளிக்க வாகனத்தின் கதவு கண்ணாடியை இறக்கிய போது அவர் தாக்கப்பட்டிருக்கிறார். விலங்குகள் உலவும் பகுதியில் வாகனங்களின் கதவுகளை திறக்க கூடாது என்று அறிவுறுத்தப்பட்டிருந்த நிலையில் சுற்றுலா பயணி கார் கண்ணாடியை திறந்ததாக சரணாலய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்த நவம்பர் மாதம் இதே சரணலயத்தில் காரை விட்டு இறங்கிய பெண் ஒருவர், புலியால் கொல்லப்பட்டார். மேலும் அவருடன் வந்த பலர் பயங்கர தாக்குதலுக்கு ‌உள்ளாயினர். இது போன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடைபெறுவதால் வனவிலங்கு சரணாலயத்தில் கண்காணிப்பை அதிகரிப்பதோடு, சுற்றுலாப் பயணிகளுக்கான கட்டுப்பாடுகளையும் அதிகரிக்க உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.