உலகம்

ஆசிரியர்களுக்கு நெகிழ்ச்சியான நன்றி.. எட்டு வயது பங்களாதேஷ் சிறுவனின் வீடியோ

webteam

உலக நாடுகளில் கொரோனா பரவல் காரணமாக ஆன்லைன் கல்வி சிறந்த கற்பித்தல் வழியாக கடைப்பிடிக்கப்படுகிறது. அதில் சில சிரமங்கள் இருந்தாலும், பெரும்பாலான பள்ளிகளில் இணையவழியில் பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இதுதான் இன்றைய புதிய எதார்த்தம் எனச் சொல்லப்படுகிறது.

பங்களாதேஷ் நாட்டைச் சேர்ந்த எட்டு வயது சிறுவன் பர்ஷாத், தனக்கு இணையவழியாக பாடங்கள் கற்பிக்கும் பள்ளி ஆசிரியர்களுக்கு நெகிழ்ச்சியுடன் நன்றி கூறி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இதனை சமூகவலைதளப் பக்கத்தில் வெளியிட்டு யுனிசெஃப் நிறுவனம் பாராட்டியுள்ளது.

ஒரே வகுப்பில் 50-க்கும் அதிகமான மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாக பாடங்களை நடத்துவது ஆசிரியர்களுக்கு பெரும் சவாலாக இருக்கிறது.

"எங்களுடைய ஆசிரியர்கள் இந்த கொரோனா காலத்தில் வித்தியாசமான வழிகளில் பாடங்கள் கற்பிக்க முயற்சி செய்கின்றனர். எதுவும் சாத்தியம் என்று அவர்கள் நம்மை ஊக்குப்படுத்த நினைக்கிறார்கள். நாம் வீட்டில் இருக்கும் நேரத்தில் உதவியாக இருக்கும் இனிய ஆசிரியர்களுக்கு நன்றி" என்று அந்த வீடியோவில் கூறியுள்ளான் சிறுவன்.

வீடியோவை வெளியிட்டுள்ள யுனிசெஃப், "எட்டு வயதுச் சிறுவனின் ஆசிரியர்களுக்கான நன்றிச் செய்தி உங்கள் முகத்தில் புன்னகையை வரவழைக்கும் " என்று பாராட்டியுள்ளது.