ஷேக் ஹசீனா எக்ஸ் தளம்
உலகம்

வங்கதேசம் | ஷேக் ஹசீனாவுக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும்.. மாணவர்கள் வலியுறுத்தல்!

வங்கதேசத்தில் ஆயிரக்கணக்கானோர் ஒன்றுகூடி, ஜூலை மாதம் அவரது அரசாங்கத்திற்கு எதிரான வெகுஜன எழுச்சியின்போது நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டதில் தொடர்புடைய, ஷேக் ஹசீனா மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீது வழக்குத் தொடர வேண்டும் என்று கோரியுள்ளனர்.

Prakash J

அண்டை நாடான வங்கதேசத்தில் இடஒதுக்கீட்டுக்கு எதிராக கடந்த ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் மாணவர் அமைப்பினர், பொதுமக்கள் இணைந்து நடத்திய புரட்சி மிகப்பெரிய வன்முறையாக வெடித்தது. குறிப்பாக, பிரதமர் ஷேக் ஹசீனா ராஜினாமா செய்ய வேண்டும் என மாணவர்கள் மீண்டும் போராட்டம் நடத்தியது அரசையே கலங்கடித்தது.

இதன் காரணமாக பிரதமர் பதவியில் இருந்து விலகிய ஷேக் ஹசீனா, இந்தியாவில் தஞ்சம் அடைந்தார். இதையடுத்து, நோபல் பரிசு பெற்ற முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு அமைந்துள்ளது.

sheikh hasina

இந்த நிலையில், வங்கதேசத் தலைநகரான டாக்காவில் ஆயிரக்கணக்கானோர் ஒன்றுகூடி, ஜூலை மாதம் அவரது அரசாங்கத்திற்கு எதிரான வெகுஜன எழுச்சியின்போது நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டதில் தொடர்புடைய, ஷேக் ஹசீனா மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீது வழக்குத் தொடர வேண்டும் என்று கோரியுள்ளனர்.

மேலும், அவரது அவாமி லீக் கட்சியை தடை செய்ய வேண்டும்; நூற்றுக்கணக்கானோர் இறப்புக்கு காரணமான ஷேக் ஹசீனாவுக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும் என்றும் மாணவர் அமைப்பினர் வலியுறுத்தினர். ஏற்கெனவே ஷேக் ஹசீனா மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. அவரை நடத்து கடத்துமாறு இந்தியா அரசுக்கு, வங்கதேச அரசு கோரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.