உலகம்

16 வயது பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து மொட்டையடித்த கொடுமை

16 வயது பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து மொட்டையடித்த கொடுமை

webteam

வங்கதேசத்தில் 16 வயது மாணவியை பாலியல் வன்கொடுமை செய்து மொட்டையடித்த வழக்கில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

16 வயது பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாக அந்நாட்டு ஆளும் கட்சியான அவாமி லீக்கின் தொழிலாளர் பிரிவை சேர்ந்த டுஃபான் சர்கெர் என்பவர் மீது ‌வழக்கு பதியப்பட்டுள்ளது. இவருக்கு உடந்தையாக இருந்ததாக மற்ற மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் அந்த மாணவியையும், அவரது தாயையும் தாக்கி மொட்டை அடித்தது சர்கெரின் மனைவி என தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக சர்கெரின் மனைவியை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.

பாலியல் வன்கொடுமை செய்யபட்ட மாணவியும், அவரது தாயும் மருத்துவமனையில் காவல் துறையினரின் பாதுகாப்புடன் சிகிச்சை‌ பெற்று வரும் காட்சி சமூக வளைதளங்களில் வெளியானதால் இந்தப் பிரச்னை அந்த நாட்டில் விஸ்வரூபம் எடுத்துள்ளது.‌