உலகம்

20டி உலகக்கோப்பை: 26 ரன்கள் வித்தியாசத்தில் ஓமனை வீழ்த்தி வங்கதேச அணி வெற்றி

20டி உலகக்கோப்பை: 26 ரன்கள் வித்தியாசத்தில் ஓமனை வீழ்த்தி வங்கதேச அணி வெற்றி

JustinDurai
இருபது ஓவர் உலகக் கோப்பை தகுதிச்சுற்று போட்டியில் வங்கதேச அணி 26 ரன்கள் வித்தியாசத்தில் ஓமனை வீழ்த்தியது.
ஓமனில் நடைபெற்ற இப்போட்டியில் முதலில் விளையாடிய வங்கதேசம், நைமின் அரை சதத்தால் 20 ஓவர்களில் 154 ரன்கள் சேர்த்தது. தொடர்ந்து விளையாடிய ஓமன் அணியில், தொடக்க வீரர் ஜத்தேந்தர் சிங் மட்டுமே சிறிது தாக்குப்பிடித்து 40 ரன்கள் எடுத்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் பெவிலியன் திரும்பிய நிலையில் அந்த அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்து 127 ரன்களை மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது.
42 ரன்களை விளாசியதோடு, 3 விக்கெட்களையும் வீழ்த்திய வங்கதேச ஆல் ரவுண்டர் சாகிப் அல் ஹசன் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். முதல் போட்டியில் தோல்வியடைந்த வங்கதேசம், இந்த வெற்றி மூலம், பிரதான சுற்றில் விளையாடுவதற்கான வாய்ப்பில் நீடிக்கிறது.