பாகிஸ்தான்  முகநூல்
உலகம்

பாகிஸ்தான் ரயில் கடத்தலுக்கு பலூச் அமைப்பு பொறுப்பேற்பு – 30 ராணுவ வீரர்கள் கொலை!

பலூச் அமைப்பின் ரயில் கடத்தல்: 30 ராணுவ வீரர்கள் பலி.

PT WEB

பாகிஸ்தானில் விரைவு ரயிலை கடத்திய பலூச் விடுதலைப் படையினர், அதில் பயணித்த 30 ராணுவ வீரர்களை கொன்றதாக தகவல் வெளியாகிவுள்ளது.

பலுசிஸ்தான் மாகாணத்தின் குவெட்டாவில் இருந்து பெஷாவர் நோக்கி ஜாபர் விரைவு ரயில் 400க்கும் மேற்பட்ட பயணிகளுடன் சென்றுக் கொண்டிருந்தது. தாதர் என்ற பகுதியில் ரயில் சென்ற போது வெடிவைத்து அதனை நிறுத்திய பலூச் விடுதலைப் படையைச் சேர்ந்த கிளர்ச்சியாளர்கள் ரயிலை சிறைப் பிடித்தனர்

அப்போது நடந்த ரயிலில் பயணித்த ராணுவ வீரர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இருதரப்பினர் இடையே நடந்த தாக்குதலில் 30 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதாக பலூச் விடுதலைப் படையினர் தெரிவித்துள்ளனர். இதற்கிடையில் சிறுவர்கள், பெண்கள் என சுமார் 150 பேரை கிளர்ச்சியாளர்கள் விடுவித்துள்ளனர். தங்கள் வசம் 214 பேர் பிணைக் கைதிகளாக இருப்பதாகவும், பாகிஸ்தான் சிறையில் இருந்து பலூச் ஆதரவாளர்களை 48 மணி நேரத்திற்குள் விடுவிக்க வேண்டுமெனவும் கிளர்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளனர்.

ரயில் கடத்தல் சம்பவத்தை உறுதி செய்துள்ள பாகிஸ்தான் அரசு, கிளர்ச்சியாளர்கள் வசமிருக்கும் பிணைக் கைதிகள் விரைவில் மீட்கப்படுவார்கள் எனத் தெரிவித்துள்ளது.