உலகம்

நேரலையில் வானிலை அறிக்கை வாசித்த தாய்: க்யூட்டாக குறுக்கே வந்த குழந்தை - வீடியோ!

நேரலையில் வானிலை அறிக்கை வாசித்த தாய்: க்யூட்டாக குறுக்கே வந்த குழந்தை - வீடியோ!

webteam

அமெரிக்காவில் பெண் ஒருவர் நேரலையாக வானிலை அறிக்கை வாசித்துக்கொண்டு இருக்கும்போது அவருடைய குழந்தை அவரை நோக்கி நடந்து வந்து காலைப் பற்றிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பல்வேறு துறையினரும் வீட்டில் இருந்தே வேலைபார்த்து வருகின்றனர். வீட்டில் இருந்தே அலுவலக மீட்டிங்கிலும் கலந்துகொள்கின்றனர். சில நேரங்களில் மீட்டிங் நேரலையில் சென்றுகொண்டிருக்கும்போது வீட்டில் இருக்கும் குட்டீஸ் குறுக்கே புகுந்து சேட்டைகள் செய்யும். அது மாதிரியான பல வீடியோக்கள் இணையத்தில் வைரலாகியுள்ளன. அப்படி பெண் ஒருவர் நேரலையாக வானிலை அறிக்கை வாசித்துக்கொண்டு இருக்கும்போது அவருடைய குழந்தை அவரை நோக்கி நடந்து வந்து காலைப் பற்றிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் பகுதியைச் சேர்ந்த லெஸ்லி லோபஸ் என்பவர் தொலைக்காட்சி ஒன்றில் வானிலை அறிக்கை வாசித்து வருகிறார். கொரோனா காலம் என்பதால் வீட்டில் இருந்தபடியே வானிலை அறிக்கையை நேரலையில் வாசித்து வந்துள்ளார். அப்படி ஒருநாள் லைவாக வானிலை அறிக்கை வாசித்துக்கொண்டு இருக்கும்போது குறுக்கே வந்த அவருடைய 9 மாத மகன் தாயின் காலைப்பற்றி நின்றான்.

என்ன செய்வதென்று தெரியாத லோபஸ் சிரித்துகொண்டே தன் மகனை கைகளில் ஏந்துகிறார். அதேநேரம் வானிலை அறிக்கையையும் வாசித்து முடிக்கிறார். அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.