உலகம்

யானைக் குட்டிக்கு ZOOM எனப் பெயர் சூட்டிய பூங்கா! ஏன் தெரியுமா..?

யானைக் குட்டிக்கு ZOOM எனப் பெயர் சூட்டிய பூங்கா! ஏன் தெரியுமா..?

JustinDurai

மெக்ஸிகோவில் உள்ள சஃபாரி பூங்கா ஒன்றில் பிறந்த யானைக் குட்டிக்கு ‘ZOOM’ என்ற பெயர் சூட்டியுள்ளனர் பூங்கா ஊழியர்கள். 

மெக்ஸிகோவில் உள்ள ஆப்பிரிக்கம் சஃபாரி பூங்காவில், நமீபியாவில் இருந்து மீட்கப்பட்ட பெண் யானை ஒன்று வளர்ந்து வருகிறது. சினைப் பருவத்தில் இருக்கும் இந்த யானைக்கு வேட்டை விலங்குகளால் ஆபத்து நேரக்கூடும் எனக் கருதிய பூங்கா ஊழியர்கள் கேமரா பொருத்தி கண்காணித்து வந்தனர்.

இந்நிலையில் யானைக்கு பிரசவ அறிகுறிகள் தென்பட்டதும், ஒரு புதிய முயற்சியாக ‘ZOOM’ ஆப் மூலம் அதனை நேரடி ஒளிபரப்பு செய்ய பூங்கா நிர்வாகம் முடிவு செய்தது. அதன்படி பிரசவம் முழுவதும் ZOOM’ ஆப் வழியாக நேரலையில் ஒளிபரப்பு செய்யப்பட்டது. 

இதையடுத்து, பிறந்த யானைக் குட்டிக்கு ‘ZOOM’ எனப் பெயர் சூட்டியுள்ளனர் பூங்கா ஊழியர்கள். தாய் யானையும் குட்டியும் நலமுடன் இருப்பதாகவும், யானைகள் சற்று வளர்ந்ததும் ஆப்ரிக்கா காடுகளில் விட திட்டமிடப்பட்டுள்ளதாகவும் பூங்கா அதிகாரி தெரிவித்துள்ளார்.