நாட்டை விட்டு புலம்பெயறும்போது 32 ஆயிரம் குழந்தைகள் மரணமடைந்துள்ளதாக ஐ.நா வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரியவந்துள்ளது.
அண்மையில் மத்திய அமெரிக்காவை சேர்ந்த ஆஸ்கர் என்பவர், தனது குடும்பத்துடன் அமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாக நுழைய முயன்றார். மெக்சிகோவின் எல்லையில் உள்ள ரியோ கிராண்ட் ஆற்றைக் கடக்கும்போது, தனது இரண்டு வயது பெண் குழந்தையுடன் உயிரிழந்தார். இதுதொடர்பான புகைப்படம் வெளியாகி அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இவ்வாறாக தினமும் தங்கள் நாட்டை விட்டு வெளியேறுபவர்களில் ஒரு நாளைக்கு ஒரு குழந்தை உயிரிழக்கிறது அல்லது காணாமல் போகிறது என ஐ.நா அகதிகள் நலன் அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையின் மூலம் தெரியவந்துள்ளது. அதன்படி, கடந்த 5 ஆண்டுகளில் புலம்பெயரும்போது இறந்த குழந்தைகளின் எண்ணிக்கை 32 ஆயிரம் என்றும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இவர்களில் ஆயிரத்து 600 குழந்தைகள் ஆறு மாதத்திற்கு குறைவான வயதுடையவர்கள் என்பதும் தெரியவந்துள்ளது.