உலகம்

கங்காருகளின் எண்ணிக்கை: ஆஸி. எடுத்த அதிரடி முடிவு

webteam

கங்காருகளின் எண்ணிக்கை பெருகி வருவதால் அதை குறைக்க ஆஸ்திரேலிய அரசு அதிரடி முடிவை எடுத்துள்ளது.

ஆஸ்திரேலியாவின் தேசிய விலங்கு கங்காரு. அந்நாட்டின் அடையாளங்களில் ஒன்று. இந்த கங்காருகள் அந்நாட்டு மக்கள் தொகையை விட இரண்டு மடங்கு அதிகரித்துள்ளன இப்போது. அதாவது 2016-ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி 50 மில்லியன் கங்காருகள் உள்ளதாக கணக்கெடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அதைக் கட்டுப்படுத்த அரசு முடிவு செய்துள்ளது. அங்கு மிருக வதை சட்டங்கள் கடுமையாக இருந்தாலும் இப்போது வேறு வழி தெரியாததால், அதன் இறைச்சிகளை அதிகமாக விற்க அந்நாட்டு அரசு அறிவுறுத்தியுள்ளது. மக்கள் கங்காரு இறைச்சிகளை அதிகம் சாப்பிட வேண்டும் என்றும் கூறியுள்ளது. அதன் இணையதளத்தில் கங்காரு இறைச்சி உடலுக்கு நல்லது எனவும் விளம்பரப் படுத்தி உள்ளது.