உலகம்

டேட்டிங் அப் விபரீதம் : வீட்டிற்கு அழைத்து இளைஞரை கொன்ற இளம்பெண்

டேட்டிங் அப் விபரீதம் : வீட்டிற்கு அழைத்து இளைஞரை கொன்ற இளம்பெண்

webteam

டேட்டிங் அப் மூலம் ஏற்பட்ட பழக்கத்தில், இளைஞரை வீட்டிற்கு அழைத்து கொன்ற இளம்பெண் கைது செய்யப்பட்டார்.

மவுலின் ராதோத் (25) என்ற இளைஞர் இந்தியாவை சேர்ந்தவர். இவர் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் மாணவர் விசா மூலம் ஆஸ்திரேலியா சென்றுள்ளார். அங்கு இவரது நண்பர்கள் சிலரும் உள்ளனர். ஆஸ்திரேலியாவில் டேட்டிங் அப் மூலம் ஜெமி லி என்ற பெண், மவுலினுக்கு அறிமுக ஆகியுள்ளார். இவர்களது பழக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துள்ளது. இருவரும் நண்பர்களாகியுள்ளனர். 

இந்நிலையில் ஜெமி, தனது வீட்டிற்கு வருமாறு அழைத்துள்ளார். அங்கு இருவரும் இருந்தபோது, ஏதோ வாக்குவதம் ஏற்பட்டுள்ளது. இந்த வாக்குவாதத்தின் பின்னர் ஜெமி, மவுலினை கடுமையாக தாக்கியுள்ளார். இதில் ரத்தம் வடிய காயமடைந்த மவுலின், மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இதையடுத்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விசாரணை நடத்திய காவல்துறை அதிகாரிகள், ஜெமியை கைது செய்தனர். அவர் மீது வெளிநாட்டவர் மீது வேண்டுமென்றே தாக்குதல் நடத்துதல், இரக்கமின்றி கடுமையாக தாக்குதல் மற்றும் கொலை வழக்கு உள்ளிட்டவை பதிவு செய்யப்பட்டுள்ளன.

அவர் ஆஸ்திரேலிய நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர். அத்துடன் வழக்கை நவம்பர் 19ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர். இதுதொடர்பாக விளக்கமளித்துள்ள இந்திய தூதரகம், “குற்றம்சாட்டப்பட்டவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க ஆஸ்திரேலிய அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளோம். மவுலின் உடலை விரைந்து இந்தியா கொண்டு வர நடவடிக்கை எடுத்துள்ளோம். ஆனால் சில சட்ட நடைமுறைகளால் அவரது உடலை இந்திய கொண்டு செல்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளது.