ஆஸ்திரேலியாவில் விமானத்தை தகர்த்து மிகப்பெரிய தாக்குதல் நடத்த திட்டமிருந்த பயங்கரவாதிகளின் சதியை
காவல்துறையினர் முறியடித்தனர்.
சிட்னி நகரில் பயங்கரவாத தாக்குதல் நடக்க இருப்பதாக தகவல் கிடைத்ததை அடுத்து, சிட்னி முழுவதும் காவல்துறையினர் தீவிர சோதனை நடத்தினர். அதில் சந்தேகத்துக்கு உரிய 4 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் விமானத்தை தகர்க்கத் திட்டமிட்டிருந்தது தெரிய வந்தது. அது உள்நாட்டு விமானமா அல்லது சர்வதேச விமானமா என்பது பற்றிய விவரத்தை போலீசார் தெரிவிக்கவில்லை. இதனை அடுத்து அனைத்து விமான நிலையங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.