உலகம்

ஆஸ்திரேலியாவுக்குள் நுழைய முயற்சி: இலங்கையை சேர்ந்த 29 பேர் நாடு கடத்தல்

ஆஸ்திரேலியாவுக்குள் நுழைய முயற்சி: இலங்கையை சேர்ந்த 29 பேர் நாடு கடத்தல்

webteam

ஆஸ்திரேலியாவுக்கு சட்டவிரோதமாக செல்ல முயன்ற இலங்கையைச் சேர்ந்த 29 பேர் நாடு கடத்தப்பட்டனர். 

கடந்த 27ம் தேதி கடல் வழியாக இலங்கையைச் சேர்ந்த 29 பேர் ஆஸ்திரேலியாவுக்கு அடைக்கலம் தேடி சென்றனர். இலங்கையின் மாத்தறை அம்பாந்தோட்டை மற்றும் தங்காலை பகுதிகளைச் சேர்ந்த சிங்களர்கள் அவர்கள். அவர்கள் சென்ற படகு மேற்கு ஆஸ்திரேலியா கடற்பகுதியில் வந்த போது, ஆஸ்திரேலிய பாதுகாப்பு படையினர் கைது செய்தனர்.

பின்னர் சட்டவிரோதமான முறையில் வந்த அவர்களை இலங்கைக்கே ஆஸ்திரேலியா அரசு நாடு கடத்தியது. இதையடுத்து அவர்கள் விமானம் மூலம்  கொழும்பு வந்தடைந்தனர்.