ஆஸ்திரேலியாவின் தென்கிழக்கு பகுதிகள் காட்டுத் தீயால் ஓலமிடுகின்றன. ஆஸ்திரேலியாவின் தென்கிழக்குப் பகுதியில் வேகமாகப் பரவி வரும் காட்டுத் தீ காரணமாக, பல விலங்குகள் தீயில் கருகி வருகின்றன. உலகெங்கிலும் இருந்து பல நூறு தன்னார்வலர்கள் மனிதனையும், விலங்குகளையும் காக்க முயற்சி செய்து வருகின்றனர். சமூக வலைதளங்களில் பல புகைப்படங்களை பகிர்ந்து பலரும் காட்டுத்தீயிக்காக வருத்தம் தெரிவித்து வருகின்றனர். இதில் பல புகைப்படங்கள் பல ஆண்டுகளுக்கு முன்பு எடுக்கப்பட்ட பழைய புகைப்படங்கள்.
புகைப்படம்1:
ஆடுகள் எரிந்த நிலையில் கிடக்கும் இந்த புகைப்படம், 2017ம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் எடுக்கப்பட்டது.
புகைப்படம்2:
ஒருவரை கங்காரு அணைத்துகொண்டு நிற்பது போல பரவும் புகைப்படம் 2019 நவம்பரில் எடுக்கப்பட்டது. விலங்கு ஆர்வலர் ஒருவரை பாசத்துடன் கங்காரு ஒன்று அணைத்துக்கொள்ளும் புகைப்படம் அது.
புகைப்படம்3:
தீயில் கிடந்து முகமெல்லாம் அழுக்கும், கரியுமாக அமர்ந்திருக்கும் தீயணைப்பு வீரர்களின் புகைப்படம் 2019 பிப்ரவரியில் எடுக்கப்பட்டது. நிஜ ஹீரோக்கள் என்று இன்று தலைப்பிட்டு இந்த புகைப்படம் பரவி வருகிறது.
புகைப்படம்4:
எரியும் புலி போன்ற புகைப்படம் 2012ம் ஆண்டு இந்தோனேஷியாவில் எடுக்கப்பட்டது. வேட்டைக்காரர்களால் வேட்டையாடப்பட்டு பதப்பட்ட விலங்குகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அப்போது எரிந்த விலங்குகளின் புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது
புகைப்படம்5:
ஒரு பெண்ணை கங்காரு அணைத்து நிற்கும் இந்த புகைப்படம் 2015ம் ஆண்டு எடுக்கப்பட்டது.
புகைப்படம்6:
குதிரை எரிந்த நிலையில் கிடக்கும் இந்த புகைப்படம் 2009ம் வருட காட்டுத்தீயில் எடுக்கப்பட்ட புகைப்படம் ஆகும்.
புகைப்படம்7:
ஒருவரின் காலை கரடி கட்டிப்பிடிப்பது போல பரவும் வீடியோவும், புகைப்படமும் ஓராண்டுக்கு முன்பு எடுக்கப்பட்டது
புகைப்படம்8:
ஒரு குடும்பம் பாலத்துக்கு கீழ் தண்ணீரில் நின்று கொண்டு தவிப்பது போல் இருக்கும் இந்த புகைப்படம், 2013ம் ஆண்டு எடுக்கப்பட்டது. 2013ல் ஏற்பட்ட காட்டுத்தீயின் போது எடுக்கப்பட்ட புகைப்படம் இது.