உலகம்

ஆங் சான் சூச்சி மீது புதிய குற்றச்சாட்டு: நிரூபிக்கப்பட்டால் 15 ஆண்டுகள் சிறை

JustinDurai

மியான்மரில் வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டிருக்கும் ஆங் சான் சூச்சி மீது அந்நாட்டு ஊழல் தடுப்பு அமைப்பு புதிய குற்றச்சாட்டை கூறியுள்ளது.

தொண்டு நிறுவனத்திற்கு சொந்தமான நிலத்தை முறைகேடாக பயன்படுத்தி அவர் ஆதாயம் பெற்றதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக அதிகாரத்தைப் பயன்படுத்தி பணம், தங்கம் போன்றவற்றைப் பெற்றதாகவும் ஆங் சான் சூச்சியின் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இந்தக் குற்றச்சாட்டுகள் உறுதி செய்யப்படும் பட்சத்தில் 15 ஆண்டுகள் வரை சிறைதண்டனை வழங்க அந்நாட்டு சட்டத்தில் வழி உள்ளது. தேர்தலில் முறைகேடு செய்து வெற்றி பெற்றதாக ஆங்சான் சூச்சி கட்சியின் மீது குற்றம் சுமத்தி ராணுவம் கடந்த ஃபிப்ரவரியில் ஆட்சியை கைப்பற்றியது. அப்போது முதல் அந்நாட்டில் மக்கள் போராட்டமும் தொடர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.