உலகம்

"போரை நிறுத்தும் நோக்கிலே தாக்குதல் நடத்தினோம்"- ட்ரம்ப்

"போரை நிறுத்தும் நோக்கிலே தாக்குதல் நடத்தினோம்"- ட்ரம்ப்

jagadeesh


ஈரானுடன் போரை‌ நிறுத்த வேண்டும் என்‌‌ற நோக்கத்தில் தான் பாக்தாத்தில் தாக்குதல் நடத்தினோம் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப்‌ கூறியுள்ளார்.

ஈரான் மக்கள் மீது தமக்கு அதிகப்படியான மதிப்பு உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்‌. ஈரானில் எவ்வித ஆட்சி மாற்றத்தையும் அமெரிக்கா எதிர்பார்க்கவில்லை,‌ என்றும் இருப்பினும் ஈரான் அரசு அண்டை நாடுகளை சீர்குலைக்கும் செயல்களை உடனடியாகக் கைவிட வேண்டும் எனவும் ட்ரம்ப் தெரிவித்தார்.

மேலும் தன்னுடைய வழிகாட்டுதலின் படியே அமெரிக்க ராணுவம் சார்பில், பாக்தாத் விமான நிலையத்தில் துல்லிய தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், கொல்லப்பட்ட ஈரான் ராணுவ உயர்மட்ட தளபதி உலகின் மிகப்பெரிய பயங்கரவாதி எனவும் டிரம்ப் குற்றம்சாட்டினார். அமெரிக்க தூதர்கள் மீதும், ராணுவ வீரர்கள் மீதும் தாக்குதல் நடத்த சுலைமானி சதித்திட்டம் தீட்டியதாலேயே அவரைக் கொன்றதாகவும் ட்ரம்ப் விளக்கமளித்துள்ளார்.