ship attack ai image
உலகம்

ஓமன் கடலில் கப்பல் மீது தாக்குதல் - இந்தியா கண்டனம்!

ஓமன் கடற்பகுதியில் பானாமா எண்ணெய் டேங்கர் மீது நடந்த தாக்குதலை இந்தியா கடுமையாக கண்டித்துள்ளது.

Rishan Vengai

ஓமன் கடற்பகுதியில் பானாமா எண்ணெய் டேங்கர் மீது நடந்த தாக்குதலை இந்தியா கடுமையாக கண்டித்துள்ளது. கப்பலில் இருந்த 14 இந்தியர்களில் 13 பேர் மீட்கப்பட்ட நிலையில், ஒருவரை தேடும் பணி தீவிரமாக நடக்கிறது.

ஓமன் கடற்பகுதியில் பானாமா நாட்டின் எண்ணெய் டேங்கர் கப்பல் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

கப்பல் மீது தாக்குதல்

கப்பலிலிருந்த 14 இந்திய ஊழியர்களில் 13 பேர் மீட்கப்பட்டுள்ள நிலையில், மாயமான ஒருவரைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஓமன் அரசுடன் இணைந்து மீட்புப் பணிகளை கண்காணித்து வருவதாக, மத்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

வர்த்தகக் கப்பல்கள் மீதான தாக்குதல்களை ஏற்க முடியாது என்றும், கடல்சார் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்றும் இந்தியா வலியுறுத்தியுள்ளது.