இஸ்ரேல் ஹமாஸ் போர்
இஸ்ரேல் ஹமாஸ் போர் pt web
உலகம்

’மரண ஓலங்கள்’ - இஸ்ரேல் இசை நிகழ்ச்சியில் நடத்தப்பட்ட தாக்குதல்; சிதறிக்கிடந்த 260 பேரின் சடலங்கள்!

PT WEB

பாலஸ்தீனத்தைச் சேர்ந்த ஹமாஸ் ஆயுதக் குழுவினர் நேற்று முன்தினம் காலை இஸ்ரேல் மீது தாக்குதலைத் தொடங்கினர். ‘ஆபரேஷன் அல்-அக்‌ஷா பிளட்’ என்ற பெயரில் தாக்குதலைத் தொடங்கிய ஹமாஸ் ஆயுதக் குழுவினர் 20 நிமிடங்களில் சுமார் 5000 ராக்கெட் குண்டுகளை வீசியது உலகளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதேபோல் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் இஸ்ரேலுக்குள் ஊடுருவினர். சிறிய ரக விமானங்கள் கடல் எனப் பல வழிகளில் ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேலுக்குள் ஊடுருவினர். போர் சூழல் மூன்றாவது நாளாக இன்றும் நீடித்து வருகிறது. இதுவரை ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக தகவல் தெரிவிக்கின்றன.

இந்த சூழலில் இஸ்ரேலில் இசை நிகழ்ச்சியை குறிவைத்து ஹமாஸ் குழுவினர் நடத்திய தாக்குதலில் 260 பேர் உயிரிழந்துள்ளனர். நெகேவ் பகுதியில் பிரமாண்ட புத்தர் சிலையின் கீழே நடனமாடியவர்களுக்கு ஏற்பட்ட சோகம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமைதிக்கான இசை நிகழ்ச்சி என்று மிக பிரபலமாக நடைபெற்ற இந்த இசை நிகழ்ச்சியில் இஸ்ரேல் மக்கள் தவிர பிற வெளிநாட்டினரும் கலந்து கொண்டனர். அமெரிக்கா ஜெர்மனி போன்ற நாடுகளைச் சேர்ந்தவர்களும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.