மேசடோனியா முகநூல்
உலகம்

மேசடோனியா| இரவுநேர கேளிக்கை விடுதி... பற்றி எரிந்த தீ; 59 பேர் பரிதாப மரணம்!

அந்நாட்டு ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், இது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஜெனிட்டா ரோஸ்லின்

வடக்கு மாசிடோனியாவில் இரவுநேர கேளிக்கை விடுதி ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் குறைந்தது 59 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும்,100 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அந்நாட்டு ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்,

வடக்கு மேசடோனியாவின் கோக்கானி பகுதியில் உள்ள ஓர் இரவு விடுதியில் ஹிப் ஹாப் இசை நிகழ்ச்சியின் போது ஏற்பட்ட தீ விபத்தில் 59 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த இரவு விடுதி தலைநகர் ஸ்கோப்ஜேவில் இருந்து 100 கிமீ தொலைவில் உள்ளது. விபத்தில் பலரும் காயமடைந்துள்ளனர். இதனால் உயிரிழப்புகள் அதிகரிக்கலாம் என்று தெரிவித்துள்ளனர்.

இந்த விபத்தில் சிக்கி 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் அவர்கள் Stip, Kocani, and Skopje வில் உள்ள மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன. அந்நாட்டின் உள் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

கொக்கானி நகரில் உள்ள இந்த கேளிக்கை விடுதியில், தீ விபத்து குறித்த காரணத்தை போலிசார் விசாரித்த போது முதற்கட்ட விசாரணையில் சில தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி, இந்த கேளிக்கை விடுதியில் பிரபல ஹிப் ஹாப் இசைக் குழு நிகழ்ச்சியை நடத்திக் கொண்டிருந்தது.

அதில் 1500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டிருந்தனர். அப்போது அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இளைஞர்கள் சிலர் தீயைக் கொண்டு சில சாகசங்கள் நிகழ்த்தியுள்ளனர். அதிலிருந்தே நெருப்பு அரங்கின் மேற்கூரையில் பரவி தீ விபத்து ஏற்பட்டுள்ளது என்று கூறப்பட்டுள்ளது. இருப்பினும், விபத்து குறித்த தீவிர விசாரணைக்குப் பின்னரே காரணம் உறுதியாகத் தெரியவரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.