உலகம்

வங்கதேசம் : தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து - 52 பேர் உயிரிழப்பு

வங்கதேசம் : தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து - 52 பேர் உயிரிழப்பு

EllusamyKarthik

வங்கதேச நாட்டின் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 52 பேர் உயிரிழந்தனர், பலர் காயமடைந்தனர். அங்குள்ள ரூப்கஞ்ச் பகுதியில் ஆறு அடுக்கு கட்டடத்தில் ஜூஸ் தயாரிக்கும் ஆலை செயல்பட்டு வருகிறது. 

இந்த ஆலையின் கீழ் தளத்தில் தீப்பற்றி, மேல் தளம் வரை பரவியது. திடீரென விபத்து ஏற்பட்டதால், ஆலையில் பணியில் இருந்த ஏராளமானவர்கள் சிக்கிக் கொண்டனர். 

இதுவரை 52 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. 50க்கும் அதிகமானவர்கள் காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தீ விபத்து ஏற்பட்ட போது ஆலையின் முன்பக்க கதவு மூடப்பட்டிருந்ததால் தொழிலாளர்களால் வெளியேற முடியவில்லை எனத் தெரியவந்துள்ளது.