உலகம்

செல்போன் டவரில் ஹெலிகாப்டர் மோதி 5 பேர் உயிரிழப்பு

செல்போன் டவரில் ஹெலிகாப்டர் மோதி 5 பேர் உயிரிழப்பு

webteam

செல்போன் டவரின் மீது ஹெலிகாப்டர் மோதிய விபத்தில் அரசு அதிகாரிகள் 5 பேர் உயிரிழந்த சம்பவம் சூடான் நாட்டில் நடந்துள்ளது. 

சூடான் நாட்டின் கார்டோம் என்ற நகருக்கு அருகே வயல் வெளியின் மேல் சென்றுக்கொண்டிருந்த ஹெலிகாப்டர் அங்கிருந்த செல்போன் டவரின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஹெலிகாப்டர் முற்றிலும் தீப்பிடித்ததில், அந்த இடமே கரும்புகையானது. இருப்பினும் தரையில் இறங்கமுயன்ற ஹெலிகாப்டர் தீயின் வேகத்தால் முற்றிலும் எரிந்தது. 

இந்த விபத்தில் ஹெலிகாப்டரில் பயணம் செய்த 5 அரசு உயர் அதிகாரிகள் உயிரிழந்தாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் அல்-கதாரிப் ஆளுநர், அமைச்சரக தலைவர், வேளாண் துறை அமைச்சர் ஆகியோர் உயிரிழந்துள்ளதாக சூடன் செய்தி நிறுவனங்கள் சில கூறியுள்ளன. இந்த விபத்து எத்தியோப்பியாவின் எல்லைப்பகுதி அருகே நடந்ததால் கூடுதல் தகவல்இன்னும் பெறப்படவில்லை. ஆனால் சூடான் மாநில செய்தி நிறுவனமான சூனா, இதில் 6 அரசு அதிகாரிகள் இறந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளது.

அண்மை வருடங்களில் சூடானில் ஏற்பட்ட மிகத்துயரமான விபத்துக்களில் ஒன்றாக இது கருதப்படுகிறது. மிகவும் பழமையான மாடல் வகை ஹெலிகாப்டர் என்பதால் கட்டுப்பாட்டை இழந்து விபத்தில் சிக்கியது விசாரணையில் தெரியவந்துள்ளது.