இந்தோனேஷியாவில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் ஊழியர்கள் 47 பேர் உயிரிழந்தனர்.
இந்தோனேஷியாவின் தங்கேரங் நகரில் இயங்கி வரும் பட்டாசு ஆலைக்கு, பட்டாசுகள் தயாரிப்பதற்கான மூலப் பொருட்களை ஏற்றிக் கொண்டு ஒரு வாகனம் சென்றது. அந்த மூலப் பொருட்களை கீழே இறக்கி வைப்பதற்குள் திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் மூலப் பொருட்கள் வெடித்துச் சிதறி ஆலை முழுவதும் மளமளவென தீ பரவியது. கொளுந்துவிட்டு எரிந்த தீயில் ஊழியர்கள் 47 பேர் சிக்கி பரிதாபமாக உயிரிந்தனர். அங்கிருந்த 10-க்கும் மேற்பட்ட வாகனங்களும் தீக்கிரையாகின. படுகாயமடைந்தவர்கள் தலைநகர் ஜகார்த்தாவில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். 103 ஊழியர்களுடன் இரு மாதங்களுக்கு முன்னர்தான் இந்த பட்டாசு ஆலை திறக்கப்பட்டுள்ளது. விபத்துக்கான காரணம் குறித்து காவல்துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.