உலகம்

புர்கினா ஃபசோ நாட்டில் துப்பாக்கிச்சூடு: 14 பேர் உயிரிழப்பு

Sinekadhara

புர்கினா ஃபசோ நாட்டில் அடையாளம் தெரியாத நபர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 14 பேர் உயிரிழந்தனர்.

புர்கினோ ஃபசோவில் நிகழ்ந்த அரசியல் மாற்றம், போராட்டங்களுக்கு வித்திட்டுள்ளது. அதிபர் ரோஜ் கபோர், பிரதமரை பதவி நீக்கம் செய்துவிட்டு, ராணுவத் தளபதியையும் மாற்றினார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடைபெறும் வரும் நிலையில், அரசுக்கு ஆதரவாக செயல்படும் படையை சேர்ந்தவர்களை குறி வைத்து அடையாளம் தெரியாத நபர் துப்பாக்கிச் சூடு நடத்தினார்.

இதில், 14 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலின் பின்னணியில் அல்கொய்தா அல்லது ஐஎஸ் அமைப்பு தொடர்பு இருக்கலாம் என புர்கினோ ஃபசோ அரசு தெரிவித்துள்ளது.