பாகிஸ்தானில் நடத்தப்பட்ட தற்கொலைப் படைத் தாக்குதலில் சிக்கி 12 பேர் உயிரிழந்தனர்.
கைபர் பக்துன்குவா மாகாணத்தில் உள்ள பன்னு கண்டோன்ட்மென்ட் பகுதியில், வெடிகுண்டுகள் நிரப்பப்பட்ட வாகனங்களை சுவர் மீது மோதி பயங்கரவாதிகள் வெடிக்கச் செய்துள்ளனர்.
இதில் 12 பேர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்த நிலையில், 30க்கும் மேற்பட்டோர் காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து, இந்த தாக்குதலில் ஈடுபட்ட ஆறு பயங்கரவாதிகளை பாதுகாப்புப் படையினர் சுட்டுக்கொன்றனர். இந்த தற்கொலைப் படைத் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ள மாகாண அரசு, இதுதொடர்பான விசாரணை அறிக்கையை சமர்ப்பிக்க காவல் துறைக்கு உத்தரவிட்டுள்ளது.