சிரியாவில் காவல்நிலையத்தை குறிவைத்து நடத்தப்பட்ட மனித வெடிகுண்டு தாக்குதலில் 17 பேர் உயிரிழந்தனர்.
தலைநகர் டமாஸ்கஸின் அண்டை நகரமான மிடானில் இயங்கி வந்த காவல்நிலையத்தில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டது. முதலில் கையெறி குண்டுகளை வீசி காவல்துறையினரின் கவனத்தை திசை திருப்பிய பயங்கரவாதிகள், பின்னர் தங்கள் உடலில் கட்டியிருந்த வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்தனர். இந்த கோர சம்பவத்தில் காவல்நிலையத்துக்குள் இருந்த காவலர்கள், ராணுவ வீரர்கள் உள்பட 17 பேர் உயிரிழந்தனர். குண்டுவெடித்ததில் காவல்நிலையத்தின் அருகில் இருந்த வீடுகள், கட்டடங்கள் மற்றும் வாகனங்களும் கடுமையாக சேதமடைந்தன.