hidden moon orbiting in Uranus  FB
உலகம்

நீல வண்ண பந்து.. யுரேனஸ் கிரகத்தை சுற்றிவரும் புதிய நிலவு கண்டுபிடிப்பு..!

கிட்டத்தட்ட 40 ஆண்டுகளுக்கு முன் யுரேனஸை கடந்து சென்ற வாயேஜர்-2 விண்கலத்தால் கூட இந்த நிலவை கண்டறிய முடியவில்லை. யுரேனஸில் இருந்து 56 ஆயிரம் கிலோமீட்டர் தொலைவில், இது 14ஆவது நிலவாக சுற்றி வருகிறது.

Vaijayanthi S

யுரேனஸ் கிரகத்தை சுற்றி வரும் புதிய நிலவை நாசாவின் ஜேம்ஸ் வெப் டெலஸ்கோப் கண்டறிந்துள்ளது. இதன்மூலம் யுரேனசின் மொத்த நிலவுகளின் எண்ணிக்கை 29ஆக அதிகரித்துள்ளது.

1784இல் ஜெர்மனிய வானியல் நிபுணரான வில்லியம் ஹெர்செல், பூமியை விட 5 மடங்கு பருமன் கொண்ட யுரேனஸ் கிரகத்தை முதன்முதலில் கண்டறிந்தார். சூரியனிலிருந்து மிக தொலைவில் யுரேனஸ் கிரகம் அமைந்துள்ளதால் இது மிகவும் குளிர்ந்த நிலையிலும், அதே நேரத்தில் வினோதமான பண்புகளோடும் இருக்கக்கூடிய கிரகமாக உள்ளது.

இந்நிலையில், 2021ஆம் ஆண்டு விண்ணில் ஏவப்பட்ட, உலகின் மிக சக்திவாய்ந்த ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி, விண்வெளியில் ஒரு புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளது. இதுவரை மனிதர்களால் கண்டறியப்படாத, சுமார் 10 கிலோமீட்டர் விட்டமே கொண்ட ஒரு சிறிய நிலவு, யுரேனஸ் கிரகத்தைச் சுற்றி வருவதாக அது உறுதி செய்துள்ளது. கிட்டத்தட்ட 40 ஆண்டுகளுக்கு முன் யுரேனஸை கடந்து சென்ற வாயேஜர்-2 விண்கலத்தால் கூட இந்த நிலவை கண்டறிய முடியவில்லை. யுரேனஸில் இருந்து 56 ஆயிரம் கிலோமீட்டர் தொலைவில், இது 14ஆவது நிலவாக சுற்றி வருகிறது.

இந்த புதிய கண்டுபிடிப்பிற்கு சர்வதேச வானியல் சங்கம் விரைவில் ஷேக்ஸ்பியரின் கதாபாத்திரங்களில் ஒன்றின் பெயரைச் சூட்டும் என நாசா தெரிவித்துள்ளது. இந்த புதிய நிலவு, யுரேனஸ் கிரகத்தின் ஈர்ப்பு விசை மற்றும் அதன் உள் அமைப்புகள் குறித்த ஆராய்ச்சியில் ஒரு முக்கிய மைல்கல்லாக இருக்கும் என விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.

வேறு எந்த கிரகத்திலும் யுரேனஸைப் போல சிறிய உள் நிலவுகள் இல்லை என்று ஆராய்ச்சி குழுவின் உறுப்பினரான கலிபோர்னியாவின் மவுண்டன் வியூவில் உள்ள SETI நிறுவனத்தின் மேத்யூ டிஸ்கரேனோ கூறினார். மேலும், அமாவாசை முன்னர் அறியப்பட்ட உள் நிலவுகளில் மிகச் சிறியதை விட சிறியதாகவும் மிகவும் மங்கலாகவும் உள்ளது, இதனால் இன்னும் சிக்கலானது கண்டுபிடிக்கப்பட வாய்ப்புள்ளது என்றார்.