சிங்கப்பூரில் நடைபெற்றுவரும் விமானக் கண்காட்சியில் சீன விமானங்கள் அதிக வரவேற்பை பெற்றுள்ளன.
ஆசியாவின் மிகப்பெரிய விமானக் கண்காட்சி சிங்கப்பூரில் நடைப்பெற்று வருகிறது. இதில் 50க்கும் மேற்பட்ட நாடுகள் பங்கேற்றுள்ளன. சீனா, சவுதி அரேபியா, கத்தார், இந்தியா உள்ளிட்ட நாடுகளின் அதிநவீன தொழில்நுட்பங்களை கொண்டுள்ள விமானங்கள் கண்காட்சியில் இடம்பெற்றுள்ளன. சீனாவின் விமானத் தயாரிப்பு நிறுவனங்களின் விமானங்கள் அனைவரின் கவனத்தை ஈர்த்துள்ளன. வர்த்தகப் போக்குவரத்து மற்றும் ராணுவத்திற்காக பயன்படுத்தப்படும் அதிநவீன உள்கட்டமைப்பு வசதிகள் கொண்ட விமானங்கள் அதிக வரவேற்பை பெற்றுள்ளது. 11ஆம் தேதி வரை நடைபெறும் இந்த விமானக் கண்காட்சியை காண 13 ஆயிரம் பார்வையாளர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.