ஒரிஜினலை காப்பி அடிப்பதற்கும் ஒரு திறமை வேண்டும் என்றும் அது கூட பாகிஸ்தானிடம் இல்லை என்றும் வளைகுடா நாடுகளுக்கு சென்ற இந்திய குழுவின் உறுப்பினரும் ஹைதராபாத் எம்.பி.யுமான அசாதுதீன் ஒவைசி தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானின் எல்லை தாண்டிய பயங்கரவாதம் குறித்து உலக நாடுகளிடம் எடுத்துரைக்க, அனைத்து கட்சி எம்பிக்கள் அடங்கிய 7 குழுக்களை மத்திய அரசு நியமித்து உள்ளது.
அந்த வகையில் குவைத்துக்குச் சென்ற குழுவில் இடம்பெற்றுள்ள ஏஐஎம்ஐஎம் கட்சித் தலைவரும் எம்.பி.யுமான அசாதுதீன் ஒவைசி, 2019இல் சீன ராணுவம் பயிற்சியில் ஈடுபட்டபோது, எடுக்கப்பட்ட படத்தை தங்களுடையது போன்று காண்பித்தது மூலம் தாங்கள் உண்மையானவர்கள் அல்ல என நிரூபித்துள்ளதாக ஒவைசி விமர்சித்தார்.
அதாவது, சீனாவில் எடுக்கப்பட்ட படத்தை பாகிஸ்தான் ராணுவ தளபதி அசிம் முனிர் பிரதமர் ஷெரிஃப்புக்கு பரிசாக அளித்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து குவைத்தில் உள்ள இந்தியர்களிடம் பேசிய அசாதுதீன் ஒவைசி, ”இந்த ஜோக்கர்கள்தான் இந்தியாவுடன் போட்டியிட விரும்புகின்றனர். ஒரிஜினலை காப்பி அடிக்கும் திறமைகூட பாகிஸ்தானிடம் இல்லை” என்று தெரிவித்தார்.