உலகம்

பாக். பிரதமராக இன்று பதவி ஏற்கிறார் இம்ரான்கான்

webteam

பாகிஸ்தான் பிரதமராக தெஹ்ரிக் இ இன்சாஃப் கட்சியின் தலைவர் இம்ரான்கான் இன்று பதவி ஏற்கிறார்.

பாகிஸ்தான் நாடாளுமன்ற தேர்தலில் இம்ரான் கானின் கட்சி 116 இடங்களை வென்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. பெரும்பான்மைக்கு 137 உறுப்பினர்களின் ஆதரவு தேவை என்ற நிலையில் சிறிய கட்சிகள் மற்றும் சுயேட்சைகள் ஆதரவுகளுடன் ஆட்சியமைக்க இம்ரான்கான் உரிமை கோரினார். இதையடுத்து பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் நடைபெற்ற பிரதமருக்கான வாக்கெடுப்பில் இம்ரான்கான் வெற்றி பெற்றுள்ளார். 

பிரதமர் பதவிக்கான போட்டியில் பெநாசிர் பூட்டோ மகன் பிலாவல் தலைமையிலான பாகிஸ்தான் மக்கள் கட்சி பங்கேற்கவில்லை. பாகிஸ்தான் முஸ்லீம் லீக் கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் சகோதரருமான ஷாபாஸ் ஷெரீப்புக்கு 96 பேரும் இம்ரான்கானுக்கு ஆதரவாக 176 உறுப்பினர்களும் வாக்களித்தனர். இதையடுத்து பாகிஸ்தானின் 22-வது பிரதமராக இம்ரான்கான் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த நிலையில் பாகிஸ்தான் பிரதமராக இம்ரான்கான் இன்று பதவி ஏற்க உள்ளார்.